ஸ்ரீரங்கம் கோயிலில் சசிகலா தரிசனம்: அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் என கோஷத்தால் பரபரப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சசிகலா நேற்று சாமி தரிசனம் செய்தார். அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் சசிகலா என தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலையானார். சென்னையில் தங்கியிருந்த அவர் சுமார் 41 நாளுக்குபின் கடந்த 17ம் தேதி இரவு சசிகலா திடீரென தஞ்சை வந்தார். அருளானந்தம் நகரில் உள்ள கணவர் நடராஜனின் வீட்டில் தங்கினார். நடராஜனின் தம்பி பழனிவேலின் பேர குழந்தைகளுக்கு விளார் கிராமத்தில் உள்ள வீரனார் கோயிலில் நேற்றுமுன்தினம் நடந்த காதணி விழாவில் பங்கேற்றார். நேற்று காலை சசிகலா காரில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேசன், இவரது மனைவி ஆகியோர் மட்டும் சசிகலாவுடன் வந்தனர். கோயிலில் இருந்து வெளியே வந்த சசிகலா  காரில் ஏறும்போது, ‘‘அதிமுகவின் நிரந்தர  பொது செயலாளர் சசிகலா’’ என ெதாண்டர்கள் கோஷம் எழுப்பியதை பார்த்து சசிகலா சிரித்தபடி புறப்பட்டு சென்றார். …

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு