ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

 

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், சந்தவேலூர் ஊராட்சியில் உள்ள அரசினர் தொடக்கப்பள்ளியில் ரூ.27.48 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டபட்டு வருகிறது. இதனை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் பிளீச்சிங் பவுடர் சேமிப்பு குடோனையும் அவர் பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து, சந்தவேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தூர் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், பள்ளி சமையல் கூடம், வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஏரி மற்றும் போந்தூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூர்யா, சிவபானுமதி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சந்தவேலூர் வேண்டாமணி, போந்தூர் சரோஜா மணி ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்