ஒடிசாவை சேர்ந்த ஷீமா எலக்ட்ரிக் நிறுவனம், ஈகிள் பிளஸ், கிரைபான் மற்றும் டஃப் பிளஸ் என 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. ஈகிள் பிளஸ், 1200 வாட்ஸ் பிஎல்டிசி மோட்டார், 3.2 கிலோவாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி கொண்டது. அதிக பட்சமாக 50 கி.மீ வேகம் வரை செல்லும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கி.மீ. தூரம் ஓட்டலாம். கிரைபான், 1500 வாட்ஸ் பிஎல்டிசி மோட்டார், 4.1 கிலோவாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி கொண்டது. அதிகபட்சமாக 60 கி.மீ வேகம் வரை செல்லும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கி.மீ தூரம் வரை செல்லலாம். டஃப் பிளஸ், 1500 வாட்ஸ் பிஎல்டிசி மோட்டார், 4 கிலோவாட் அவர் எல்எப்பி பேட்டரி கொண்டது. அதிகபட்சமாக 60 கி.மீ தூரம் வரை செல்லும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கி.மீ தூரம் வரை செல்லலாம். மேற்கண்ட மூன்று ஸ்கூட்டர்களுமே முழுமையாக சார்ஜ் செய்ய மூன்றரை முதல் 4 மணி நேரம் ஆகும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் அடுத்த மாதம் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. …
ஷீமா ஸ்கூட்டர்கள்
previous post