வைத்தியருக்கு வைத்தியம் பார்க்க இலை கட்சியின் நிர்வாகிகள் முடிவு செய்து இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தன்னைவிட ‘சூப்பர் பவர்’ ெநற்களஞ்சிய மாவட்டத்தில் உருவாகக் கூடாது என்பதற்காக… அரசியலில் ஆடுபுலி ஆட்டம் ஆடி… சீனியர்களை காலி செய்த ‘வைத்தியர்’ மூவ் பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இலை கட்சி கூட்டணி கட்சியான தாமரைக்கு திருவையாறு, சைக்கிளுக்கு பட்டுக்கோட்டை, இன்னொரு மூன்றெழுத்து கட்சிக்கு கும்பகோணம் என 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள தொகுதிகளில் இலைகட்சி சீனியர்களுக்கு சீட் கொடுக்கவில்லையாம். இதன் பின்னணியை விசாரித்தால் பல அதிர்ச்சிகரமான தகவல்களை புலம்பியபடி இலை நிர்வாகிகள் கொட்டுகின்றனர்… அதாவது, 2011 சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட ‘வைத்தியர்’ படுதோல்வி அடைந்தார். பாபநாசம் தொகுதியில் வெற்றிபெற்று சமீபத்தில் கொரோனாவால் மறைந்த சீனியர் அமைச்சருக்கு பதவி கொடுக்கப்பட்டது. அதேபோல் இம்முறை நடந்து விடக்கூடாது என சுயநலத்துடன் சீனியர்கள் அதிகம் நிறைந்த குடந்தை, திருவையாறு, பட்டுக்கோட்டை தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கும், திருவிடைமருதூர் தொகுதியில் சீனியர்களுக்கு கொடுக்காமல் புதுமுகங்களை வேட்பாளராக போட்டியிட ‘வைத்தியர்’ தான் காய் நகர்த்தி இருந்தாராம். கட்சியில் யாரும் தனக்கு மேல் வந்துவிடக்கூடாது நெற்களஞ்சிய மாவட்டத்தில் எப்போதும் தான் தான் ‘சூப்பர் பவராக’ இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் செயல்படும் ‘வைத்தியர்’ நடவடிக்கையால் நெற்களஞ்சிய மாவட்ட இலைகட்சி அதாளபாதாளத்தில் கிடக்காம். வெற்றி பெறக் கூடிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்க்கப்பட்டதால் வரும் சட்டமன்ற தேர்தலில் இலைகட்சியை புறக்கணிப்பது மட்டுமல்லாமல் இலைகட்சி கூட்டணிகளுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று சீனியர்கள், அவரின் ஆதரவாளர்களும் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரூ.150 கோடியில் பாதியை அதிகாரிகளும் இலை கட்சியினரும் கான்டிராக்டர்களும் ‘ஸ்வாகா’ செய்துட்டாங்களாமே.. எப்படி சாத்தியம்…’’ விளக்கம் கேட்டர் பீட்டர் மாமா.‘மெடல்’ என்ற பெயரை தமிழில் முதலில் கொண்ட மாவட்டத்தின் ‘‘பட்டி’’, ‘‘வத்தி’’ உள்ளிட்ட பெயர்களை கொண்ட 8 பேரூராட்சிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு பல்வேறு திட்டங்களுக்கென சுமார் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டிற்கான பொது நிதியிலிருந்து மேற்கொள்ள அனுமதித்து, மதுரை மண்டல அதிகாரியும் பரிந்துரைத்து திட்டம் கைக்கு வந்தது. சாலை, குடிநீர், சிறு பாலம் உள்பட 34 அடிப்படை வசதி பணிகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்டதாம். இதற்காக ஆன்லைன் டெண்டர் விட்டு, வேலை உத்தரவு வழங்கி, பணிகளை துவக்கி விட்டனர். தற்போது தேர்தல் நேரம் என்பதால் உரிய அதிகாரிகள், இலை நிர்வாகிகளுடன் சேர்ந்து முடிந்த அளவிற்கு இந்த ஒதுக்கீட்டில் பெரும் தொகையை ‘விழுங்கி’ வர்றாங்களாம். ஒப்பந்ததாரர்களும், தரமின்றி வருவாயை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அரைகுறையாக பணி செய்து வர்றாங்களாம்.. இந்த கட்டுமானங்கள் எத்தனை மாதம் தாங்கும் என்றே ெதரியாத நிலை தான் இருக்காம். இதை ‘‘உரிய உயரதிகாரிகளிடம்’’ கொண்டு ெசன்றும் பலனில்லையாம். அவர்களும் கமிஷன் தொகை சரியாக வருவதால், அரசு பணிகளில் எந்த கவனமும் செலுத்துவதில்லையாம். மக்கள் ஒன்று திரண்டு தேர்தல் நாளில் மிகப்பெரும் போராட்டத்தை நடத்தவும் ‘பட்டி’யில் முடியும் பேரூராட்சி பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களிலும் ஒரு மக்கள் போர்ப்படை தயாராகி வருகிறதாம்’ என்றார் விக்கியானந்தா.‘‘இலை நிர்வாகத்தில் எல்லோமே அரைகுறையாகதான் செய்வாங்க போல… மாவட்டத்தை பிரிச்சவங்க.. போலீசை பிரிச்சவங்க… ஆயுதப்படை போலீசார் நட்டாட்றில் விட்டுட்டாங்கனு பேசிக்கிறாங்களே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டம் நிர்வாக ரீதியாக பெரிய மாவட்டமாக இருந்துச்சு. இதனால கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாடி திருப்பத்தூர், ராணிப்பேட்டைன்னு 2 புதிய மாவட்டங்களாக பிரிச்சிட்டாங்க. மாவட்டம் பிரிச்சதுக்கு அப்புறமாவும், காவல்துறை கட்டமைப்பில் எந்தவிதமான மாற்றமும் பெரிசா செய்யல. இதில் குறிப்பா, புதிய மாவட்டங்களுக்கென்று தனியாக ஆயுதப்படை கட்டமைப்பு ஏற்படுத்தியிருக்கணும். ஆனால் அப்படி செய்யல… இதனால மூன்று மாவட்டங்களுக்கான பொதுவான ஆயுதப்படை போலீசார் மொத்தமாக வேலூரில் தான் இருக்காங்க. எலக்்ஷன் நேரத்துல இந்த போலீசாரின் பணி தான் முக்கியம்… அது மட்டுமில்லாம அவங்கதான் அரசியல், ஆர்ப்பாட்டம், மறியல்னு எது நடந்தாலும் சம்பவ இடத்துக்கு போய் அதை முடிவுக்கு கொண்டு வர்றாங்க.. விவிஐபி பாதுகாப்புக்கும் இவங்க தான் முக்கியம். புதிய மாவட்டங்களுக்கு ஆயுதப்படை போலீஸ் கட்டமைப்பு ஏற்படுத்தாததுனால, வேலூர் மாவட்டத்துல இருந்தே, அனைத்து பாதுகாப்பு பணிகளுக்கும் ஆயுதப்படை போலீசார் போக வேண்டியதிருக்காம். இப்படி தினமும் இரவு, பகல் பாராமல் பந்தாடப்படும் ஆயுதப்படை காவலருங்க மிகுந்த மனஉளைச்சல்ல இருக்காங்களாம். ராணிப்பேட்டை, திருப்பத்தூர்ல ஆயுதப்படை அமைத்தால் தான் பிரச்னை என்றால் உடனடியாக சென்று தீர்க்க முடியும்… இப்படி அலைந்து கொண்டிருக்க முடியாது என்று புலம்பி தள்ளுகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.  …

Related posts

நமுத்துப்போன போராட்டங்கள் நடத்தும் மாஜி மந்திரிகள் மீது கடுப்பில் இருக்கும் கட்சியினரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

நேரடியாக களத்தில் இறங்க சின்ன மம்மி எடுத்திருக்கும் முடிவு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

பிரிந்தவர்களை இணைக்கும் முயற்சியில் துவண்டு போன மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா