வைகை அணையில் இருந்து நீர் திறப்பால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

தேனி: வைகை அணையில் இருந்து நீர் திறப்பால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4006 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உள்ளது….

Related posts

கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்!

எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு!

வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல்!