வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள் விலை ‘கிடுகிடு’: ஒரு கிலோ மல்லி ரூ.2,000, முல்லை ரூ.1,500, கனகாம்பரம் ரூ.1000, ஜாதிமல்லி ரூ.900

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோயம்பேட்டில் பூக்கள் விலை நேற்று ‘கிடுகிடு’ என்று காணப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அனைத்து கோயில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இதன் காரணமாக,  சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.2,000 க்கும், முல்லை ரூ.1500க்கும், ஜாதிமல்லி ரூ.900க்கும், கனகாம்பரம்  ரூ.1000க்கும், சம்பங்கி ரூ.150க்கும், பன்னீர் ரோஸ் ரூ.140க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.180க்கும், அரளி பூ ரூ.250க்கும், சாமந்தி ரூ.80க்கும்  விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் சங்க தலைவர் மூக்காண்டி கூறும்போது, ‘நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி,  சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை மல்லி, முல்லை, ஜாதிமல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வைகுண்ட ஏகாதசி முடிந்தபிறகு  பூக்களின் விலை படிப்படியாக குறையும்.’’ என கூறினார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை