வேளாண் வளர்ச்சி திட்ட

விழிப்புணர்வு முகாம்மோகனூர்: மோகனூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் பால்ஜாஸ்மின் வெயியிட்டுள்ள செய்தி அறிக்கை: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டாரத்தின், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24ன் கீழ் குமரிபாளையம், செங்கப்பள்ளி, கொமரபாளையம், மணப்பள்ளி, அணியாபுரம் ஆகிய கிராம பஞ்சாயத்துகள் மற்றும் குக்கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் செயல்படுத்தபட இருக்கும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ள இடங்களில் நடைபெற உள்ளன. நாளை (22ம்தேதி) காலை 11 மணிக்கு செங்கப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகம், 23ம்தேதி குமரிபாளையம் ஊராட்சி அலுவலகம், 26ம்ந் தேதி கொமரபாளையம் கிராம நிர்வாக அலுவலகம், 28ம்தேதி அணியாபுரம் ஊராட்சி அலுவலகம், 30ம்தேதி மணப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளன. முகாம் குறித்த தகவல் மற்றும் சந்தேகங்களை அலுவலர்களிடம் விவசாயிகள் தொடர்புகொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம். முகாமில் அனைத்து விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வழங்கும் திட்டங்களை பெற்று பயன்பெறவும். இவ்வாறு அதில் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி