வேளாண் பல்கலை.யில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

கோவை, ஜூன் 6: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பல்கலைக்கழக சுற்றுசூழல் அறிவியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
பேரணியை பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில், இயற்கை வள மேலாண்மை இயக்குனர் பாலசுப்ரமணியம், முதன்மையர் (வேளாண்மை) வெங்கடேச பழனிசாமி, மரகதம், தேவகி மற்றும் மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியின் ஒரு பகுதியாக வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை