வேளாண் துறை சார்பில் சர்வதேச சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு

 

ஈரோடு,ஜூன்17: வேளாண் துறை சார்பில் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வயல் விழா மற்றும் விவசாயிகள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.ஈரோடு அடுத்த வெள்ளோடு குட்டப்பாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் சாமுவேல் தலைமை வகித்து பேசியதாவது:அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், குட்டப்பாளையம் கிராமத்தில் செயல்படுத்தப்படுகிறது. வயல் சார்ந்த பணிகளில் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். மகசூல் குறையாத வகையிலான சாகுபடி முறைகளை கையாள வேண்டும். தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார்.

சென்னிமலை ஒன்றியத் தலைவர் காயத்திரி இளங்கோ முன்னிலை வகித்தார். பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை பேராசிரியை ராமா, பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான உறுதிமொழியை விவசாயிகள் ஏற்றனர். வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, உழவன் செயலி செயல்பாடு குறித்து வேளாண் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.ஊராட்சித் தலைவர்கள் ரேணுகாதேவி, இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்