வேளாங்கண்ணி பகுதியில் வெயில் கொடுமை வேப்ப மரத்தில் கிளைகள் முறிந்து விழும் அவலம்

 

நாகப்பட்டினம், ஜூன் 2: நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெயிலின் கொடுமையால் வேளாங்கண்ணி அருகே சாலையோரம் உள்ள வேப்பமரத்தின் கிளைகள் முறிந்து விழுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த பல மாதமாக வெயிலின் அளவு 101 டிகிரிக்கு மேல் நீடித்து வருகிறது. கோடை மழை ஓரளவு கைகொடுக்கும் என எண்ணி இருந்த நேரத்தில் ஒரு நாள் மட்டும் மழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது. கோடை விடுமுறையின் காரணமாக குழந்தைகள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. ஆனால் தினந்தோறும் வேலைக்கு செல்வோர்கள் கோடை வெயிலின் கொடுமையை அனுபவித்து செல்கின்றனர்.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் காரணமாக சாலையோரங்களில் இருக்கும் மரங்கள் தண்ணீர் இன்றி காய்ந்து வருகிறது. வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டி கடைத்தெருவில் 30 ஆண்டுகள் பழமைவாய்ந்தத வேப்பமரத்தின் இலை மற்றும் கிளைகள் காய்ந்து போய் உள்ளது. காய்ந்த கிளைகள் ஆங்காங்கே முறிந்து விழுகிறது. 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரத்தின் கிளை இவ்வாறு முறிந்து விழுவதை பார்த்து அந்த வழியாக செல்லும் சில சமூக ஆர்வலர்கள் தண்ணீர் ஊற்றுகின்றனர். இருப்பினும் கோடை வெயில் கொடுமை தாங்காமல் கடந்த சில தினங்களாக கிளைகள் முறிந்து விழுகிறது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை