வேளாங்கண்ணியில் கூடுதல் ஆட்டோக்கள் இயக்கம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்

 

நாகப்பட்டினம்,நவ.21: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்கள் வந்தது. இதில் வேளாங்கண்ணி அன்னை வேளாங்கண்ணி ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர் சங்க செயலாளர் ஜான்சன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மனு கொடுத்தனர். இதில் வேளாங்கண்ணியில் 9 ஆட்டோ சங்கங்கள் உள்ளது. இதில் 200 ஆட்டோக்களுக்கு குறையாமல் இயங்கி வருகிறது. சங்கத்தில் பதிவு இல்லாமல் வெளியில் இருந்து 100க்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்குகிறது. வேளாங்கண்ணி ஆர்ச் முதல் வேளாங்கண்ணி பேரலாயம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே உள்ளது. இந்த குறைந்தபட்ச து£ரத்தில் தினந்தோறும் 300க்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்குகிறது.

இந்நிலையில் நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் திடீரென 120 ஆட்டோக்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் வேளாங்கண்ணி சாலை சிக்கியுள்ளது. இந்நிலையில் கூடுதல் ஆட்டோக்கள் இயக்கப்பட்டால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். புதிதாக ஆட்டோக்கள் இயக்கப்படுவதால் ஏற்கனவே ஆட்டோக்கள் இயக்குபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே புதிதாக ஆட்டோ இயக்கம் குறித்து ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி