வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் தேசிய டைவிங் மற்றும் வாட்டர் போலோ போட்டி: நாளை தொடங்கி 22ம் தேதி வரை நடக்கிறது

 

சென்னை: தேசிய சப் ஜூனியர் மற்றும் ஜூனியர்களுக்கான டைவிங் மற்றும் வாட்டர் போலோ போட்டிகள் சென்னையில் நாளை (18ம் தேதி) முதல் 22ம் தேதி வரை நடைபெறுகின்றன.
தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம், தேசிய நீச்சல் சம்மேளனத்தின் ஆதரவோடு 39வது சப் ஜூனியர் மற்றும் 4வது ஜூனியர் தேசிய டைவிங் மற்றும் வாட்டர் போலோ போட்டிகளை நடத்துகிறது. வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நாளை (18ம் தேதி) முதல் 22ம் தேதி வரை இப்போட்டிகள் நடக்கின்றன.

இதில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஜூனியர் தேசிய வாட்டர் போலோ போட்டியில் தேர்வு பெறும் சிறுவர், சிறுமியர் ஜூனியர் ஆசிய வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பார்கள். டைவிங் போட்டியில் குரூப் 1 பிரிவு (16, 17, 18 வயது) குரூப் 2 பிரிவு (14, 15 வயது) குரூப் 3 பிரிவு (12, 13 வயது) சிறுவர், சிறுமியருக்கு போட்டிகள் நடைபெறுகிறது. வாட்டர் போலோ விளையாட்டுக்கு ஜூனியர் சிறுவர், சிறுமியருக்கு (2006ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள்) போட்டிகள் நடைபெறுகிறது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை