வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தீ மேலும் பரவாமல் இருப்பதற்காக அப்பகுதியில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனம் வர தாமதம் என்றும் பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டினர். தீ விபத்து ஏற்பட்டதையடுத்து மத்திய பேருந்து நிலையம் இருக்கும் பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காட்பாடி டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த தீ விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது 2 பேரக்குழந்தைகள் என மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடை முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும், பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்ட கடையில் தீயை அணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்