வேலூர் சிறையில் தப்பிய ‘எலி’ தி.கோட்டில் சிக்கியது பெற்றோரை காண வந்த போது மடக்கினர்

திருச்செங்கோடு, ஜன.20: குற்ற வழக்கில் கைதாகி, வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பிய, திருச்செங்கோட்டை சேர்ந்த வாலிபரை, 8 மாதங்களுக்கு பின் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே சாலப்பாளையத்தைச் சேர்ந்த பந்தல் தொழில் செய்து வரும் சிவசுப்பிரமணியம் மகன் எலி (எ) நவீன்குமார்(22). கூலித்தொழிலாளியான இவர் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன், வேலூரில் திருட்டு முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நவீன்குமார், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 27.4.23 அன்று, வேலூர் மத்திய சிறையில் இருந்து நவீன்குமார் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்செங்கோடு போலீசாருக்கு, ேவலூர் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசாருக்கு, நேற்று நவீன்குமார் பெற்றோரை காண வீட்டுக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று நவீன்குமாரை சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்தனர். பின்னர், வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து, ஒப்படைத்தனர். நவீன்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன், திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் உள்ள வங்கி கிளையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்