வேலூர் உள்ளூர் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: வேலூர் உள்ளூர் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய முன்னேற்ற கழக தலைவர் சிவக்குமார் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை பாதுகாத்தார். தற்போது, பருவமழையில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றி இருக்கிறார். அனைத்து தரப்பு மக்களும் போற்றப்படும் நல்லாட்சியை திமுக அரசு தந்து கொண்டிருக்கிறது. கலைஞர் தனது 14 வயதிலேயே பல்வேறு சமூக இயக்கங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர். தமிழுக்காகவும், தமிழினத்திற்காகவும் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் இன்றும் தமிழர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட தலைவரை கவுரவிக்கும் வகையில், வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் அமையவுள்ள உள்ளூர் விமானத்திற்கு கலைஞர் பெயரை சூட்ட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு