வேலூர் அருகே உள்ள பொய்கை மாட்டுச்சந்தையில் களை கட்டிய வியாபாரம்

வேலூர்: வேலூர் அருகே உள்ள பொய்கை மாட்டுச் சந்தையில் இன்று வியாபாரம் களைகட்டியது. தமிழகத்தில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் கறவை மாடுகள், காளைகள், எருமைகள், மற்றும் ஆடு, கோழிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். இன்று மாடுகள் வரத்து அதிகரித்திருந்தது. இதனால் பொய்கை வாரச்சந்தையில் இன்று காலை முதலே வியாபாரம் களைகட்டியது. சில வாரஙகளுக்கு பிறகு சந்தை இன்று மீண்டும் களைக்கட்டியது. ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனையானது. விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை அதிகளவில் வாங்கிச்சென்றனர்….

Related posts

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு பொதுநல மனு!!

சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணம் செய்யும் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் முதல் அறிமுகம்! போக்குவரத்துத்துறை தகவல்

தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை