வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் சடலத்தை தர லஞ்சம் வாங்கும் சுகாதார ஆய்வாளர்; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனாவால் இறந்தவர்களின் சடலத்தை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க, பிணவறை அருகே, பைக்கில் உட்கார்ந்தபடி உறவினர்களிடம் ேவலூர் சுகாதார ஆய்வாளர் ெவங்கடேசன் ₹500 லஞ்சம் வசூலிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மற்றொரு சுகாதார ஆய்வாளரான இளங்கோவும் லஞ்சம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து துணை இயக்குனர் மணிவண்ணன் கூறுகையில், ‘லஞ்சம் வாங்கிய வெங்கடேசன் கே.வி.குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், இளங்கோ ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்ைக எடுக்கப்படும்’ என்றார்….

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்