வேப்பேரி டவுட்டனில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சோதனை அடிப்படையில் இன்று மாலை 5 – 8 மணி வரை போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு

சென்னை, ஆக.26: வேப்பேரி டவுட்டன் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சோதனை அடிப்படையில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: வேப்பேரி டவுட்டன் பகுதியில் 5 சாலைகள் சந்திப்பதால் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டியும், வாகன ஒட்டிகளின் நன்மை கருதியும் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், நேராக மற்றும் இடது புறம் திரும்ப தடை விதிக்கப்பட்டு, வலது புறம் திரும்பி நாரயண குரு சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை மற்றும் ஜெர்மையா சாலை வழியாக செல்லும் வகையில் சோதனை முறையில் போக்குவரத்தை மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், டவுட்டன் சந்திப்பில் நேராக ரித்தர்டன் சாலைக்கும் மற்றும் வலதுபுறம் திரும்பி புரசைவாக்கம் நெடுஞ்சாலைக்கும் செல்ல அனுமதியில்லை. இருசக்கர மற்றும் இலகு ரக வாகனங்கள் டவுட்டன் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 15 மீட்டர் தொலைவில் நாரயண குரு சாலையில் உள்ள ஆவின் பூத் வழியாக செல்லலாம். கனரக வாகனங்கள் டவுட்டன் சந்திப்பில் இடது புறம் திரும்பி நாரயணா குரு சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை மற்றும் ஜெர்மையா சாலை வழியாக செல்லலாம்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி