வேதாரண்யம் – திருத்துறைப்பூண்டி இடையே டெமு ரயிலை வாரந்தோறும் இயக்க வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

வேதாரண்யம், ஜூலை 16: வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி இடையே இயக்கப்படும் டெமு ரயிலை வாரந்தோறும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மீட்டர் கேஜ்பாதையில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. இந்த மீட்டர்கேஜ் பாதையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அகஸ்தியன் பள்ளியல் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரயில் பாதை ரூபாய் 294கோடியில் கடந்த 20 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று கடந்த ஏப்ரல் முடிவடைந்தது. அதன் பிறகு அகஸ்தியன்பள்ளியல் இருந்து திருத்துறைப்பூண்டி வரை ரயில் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இயக்கப்படுகிறது வெள்ளிக்கிழமை மட்டும் திருச்சிக்கு நேரடியாக இந்த டெமு ரயில் இயக்கப்படுகிறது. சனி ஞாயிறு விடுமுறை விடப்படுகிறது.

இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் ரயில் இயக்கப்படுகிறது. தற்போது அதிக வருவாய் இன்றி பெயரளவுக்கு இயக்கபட்டு வருகிறது. இதற்கு காரணம் அகஸ்தியன்பள்ளி, வேதாரண்யம், தோப்பு துறை, நெய்விளக்கு, குரவப்புலம், கரியாபட்டினம் என 5 இடங்களில் மட்டுமே ரயில் நின்று செல்கிறது. வழக்கமாக ரயிலைவிட பேருந்து இப்பகுதி மக்களுக்கு வசதியாக உள்ளது. மேலும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பு ரயில் இருந்தால் மட்டுமே இந்த ரயில் போக்குவரத்தை லாபகரமாக இயக்க முடியும் எனவும், முக்கியமாக முன்பிருந்தது போல அகஸ்தியன் பள்ளியில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்து செல்ல கூடிய நேரடி ரயிலும் இணைக்கப்பட்டால் மட்டுமே ரயில் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ரயில் உபயோகிப்பாளர்கள் தெரிவித்தனர். எனவே 20 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்படும் ரயிலை பொதுமக்கள் தொலைதூரம் செல்வதற்கு வசதியான முறையில் இயக்குவதற்கு ரயில்வே துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை