வேட்பாளரின் கணவர் கைது திமுகவினர் சாலை மறியல்

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி 179வது வார்டுக்கு உட்பட்ட பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக அதிமுகவினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு மையத்திற்குள் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. அப்போது, சிலர் அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துவிட்டு வெளியேறினர்.இதனால், சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. உடனே அங்கு மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் வைத்து, வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக வேட்பாளர் கயல்விழியின் கணவரும், திமுக நிர்வாகியுமான ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.இதை கண்டித்து திமுகவினர் திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஜெயக்குமாரை விடுவித்தால் போராட்டத்தை கைவிட்டனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை