வெள்ளமடம் நான்கு வழிச்சாலையில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு திருட்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை

 

ஆரல்வாய்மொழி, ஜன 28: வெள்ளமடம் நான்கு வழிச் சாலையில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திருடிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளிமடம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த நம்பி என்பவர் மகன் மணிகண்டன்(53) இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். தினமும் தனது ஆடுகளை காலையில் வெள்ளமடம் நான்கு வழிச்சாலையில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். சம்பவத்தன்று தனது ஆடுகளை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வீடு சென்றுள்ளார்.

மதியம் 1 மணியளவில் மணிகண்டனின் உறவினர், இருசக்கர வாகனத்தில் வந்த வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் சட்டை அணிந்த இரண்டு நபர்கள் மேய்ந்து கொண்டிருந்து ஒரு ஆட்டினை திருடி சென்றதாக தெரிவித்தார். ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த பகுதிக்கு மணிகண்டன் விரைந்து வந்து பார்த்த போது தனது ஒரு ஆட்டினை காணாது அதிர்ச்சியடைந்தார் உடனே இது சம்மந்தமாக ஆரல்வாய் மொழி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி காவல்நிலைய ஆய்வாளர் அருள்பிரகாஷ் மற்றும் உதவி ஆய்வாளர் கீதா மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆட்டினை திருடி சென்ற நபர்கள் பதிவாகியுள்ளார்களா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை