வெள்ளத்தில் மிதக்கும் அரக்கோணம் – நெமிலி தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் செல்லும் மக்கள்: உயர்மட்ட பாலம் அமைத்து தர அரசுக்கு வேண்டுகோள்..!

அரக்கோணம் : அரக்கோணத்தில் நெமிலி சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ள நிலையில் பள்ளி மாணவ, மாணவியரும், பொதுமக்களும் ஆபத்தை உணராமல் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த 10-ம் தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் எதிரொலியாக அரக்கோணம் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்ததால் அரக்கோணம் – நெமிலி பகுதியில் உள்ள கல்லாறு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. அசம்பாவிதங்களை தடுக்க கடந்த 4 நாட்களாக பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது நீர்வரத்து சற்று குறைந்துள்ள நிலையில் பள்ளி மாணவர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் ஆபத்தை உணராமல் தரப்பாலத்தை கடந்து செல்கின்றனர். பாலம் சேதமடைந்துள்ளதால் தரை பாலத்தை பயன்படுத்துவது ஆபத்தில் முடியலாம் என்று ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  வெள்ளம் முற்றிலும் வடியாத நிலையில் தரைப்பாலம் பகுதியில் காவல் துறையினரை பணியில் ஈடுபடுத்தி மக்கள் எச்சரிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு மழை காலத்திலும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி விடுவதால் இதே இடத்தில் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

Related posts

தமிழ்நாட்டில் 4 விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிப்பு

நெல்லையப்பர் கோயிலுக்கு வெள்ளி தேர் செய்ய 100 கிலோ வெள்ளி கட்டிகள்: அமைச்சர் சேகர்பாபு வழங்கி பணிகளை தொடங்கினார்

4வது சுற்று கலந்தாய்வில் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு அடுத்த வருட கலந்தாய்வில் அனுமதியில்லை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அதிரடி