வெள்ளக்கோவில் நகராட்சியில் சாக்கடையை சுத்தம் செய்யும் பணி 12 டன் குப்பைகள் அகற்றம்

 

வெள்ளக்கோவில், பிப்.2:வெள்ளக்கோவில் நகராட்சி பகுதியில் உள்ள சாக்கடைகளில், வீட்டுகுப்பைகள், வியாபாரக் கடைகளின் குப்பைகள், அழுகிய பழங்கள்,பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள், பாட்டில்கள், அழுகிய துணிகள், பழைய துணிகள் போன்ற பலதை சாக்கடையில் கொட்டியதால் சாக்கடை அடைக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் சமீபத்தில் பெய்த மழையால் மழை நீர் சாக்கடையில் செல்லாமல் ரோட்டில் ஓடியது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு வெள்ளக்கோவில் நகராட்சி தலைவர் கனியரசி, கமிஷ்னர் வெங்கடேஸ்வரன் உத்திரவின் பேரில் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் செல்வராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் அடைபட்ட சாக்கடையை சுத்தம் செய்து வருகின்றனர். இதில் தேசிய நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய பஸ்நிலையம் முதல் புது பஸ்நிலையம் செல்லும் பகுதியில் சாக்கடையை சுத்தம் மேற்கொண்டதில், பிளாஸ்டிக் கழிவுகள்,குப்பைகள் மண் என 12 டன் அளவில் அகற்றப்பட்டது. சாக்கடையை மூடி கடை வைத்திருப்பவர்கள் மீதும் குப்பைகளை கெட்டுபவர்கள் மீதும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

மீஞ்சூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை

பெருவாயில் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

தாமரைக்குப்பம் கால்வாய் மதகு சீரமைக்கும் பணி தொடக்கம்