வெளிநாட்டு நன்கொடை அன்னை தெரசா அமைப்பு மீதான தடை திடீர் நீக்கம்: ஒரே மாதத்தில் ஒன்றிய அரசு பல்டி

புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெறுவதை, ‘வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம்’ கட்டுப்படுத்துகிறது. இதை ஒன்றிய உள்துறை அமைச்சகம்  கண்காணித்து வருகிறது. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற முடியும்.இந்த தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுக்கு தங்களின் உரிமை சான்றிதழ்களை புதுப்பித்து கொள்ள, கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை கொடுத்த அவகாசத்தை, இந்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. அதே நேரம், ‘கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அன்னை தெரசாவால் உருவாக்கப்பட்ட, ‘மிஷனரி ஆப் சாரிட்டி’ தொண்டு நிறுவனத்தின் உரிமம் புதுப்பித்தலை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து விட்டது. அதன் வங்கி கணக்குகளையும் முடக்கி விட்டது,’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், இதற்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்தது. மேலும், மிஷனரி ஆப் சாரிட்டி தானாக முன்வந்து கேட்டுக் கொண்டதால்தான் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை, வங்கி நிர்வாகம் நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தது. இந்நிலையில், மிஷனரி ஆப் சாரிட்டியின் உரிமம் புதுப்பித்தல் மீதான தடையை ஒன்றிய அரசு கடந்த 7ம் தேதி திரும்ப பெற்றுள்ளது. இதனால், ‘இத்தொண்டு நிறுவனம் இனிமேல் வெளிநாட்டு நிதியுதவியை பெற முடியும். மேலும் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்த முடியும்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரி கூறினார்….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!