வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 124 பேருக்கு கொரோனா பாதிப்பு: 40 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது..!!

டெல்லி: டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 124 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் உருமாற்றம் அடைந்த BF.7 வகை கொரோனா தொற்று பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தினமும் லட்ச கணக்கானோரை தொற்றும் இந்த வகை கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், தென்கொரிய உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்பன போன்ற கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் விதித்தன. இந்நிலையில், டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 19,227 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட 124 பேரில் 40 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 14 பேருக்கு Xbb வகை, bq வகை கொரோனா 9 பேருக்கு, ba 5.2 வகை கொரோனா 2 பேருக்கு, BF.7 ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது….

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்