வெல்லம், நாட்டு சர்க்கரை மூட்டைக்கு ரூ.30 விலை உயர்வு

ஈரோடு,ஜன.7: ஈரோடு அடுத்துள்ள சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில் நேற்று நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவை மூட்டை ஒன்றுக்கு ரூ.30 வரை உயர்ந்து காணப்பட்டது.நாட்டு சர்க்கரை 30 கிலோ எடை கொண்ட 4,200 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை ரூ.1,320 முதல் ரூ.1,370 வரை விற்பனையானது.உருண்டை வெல்லம் 4,900 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை ரூ.1,400 முதல் ரூ.1,450 வரை விற்பனையானது.அச்சு வெல்லம் 500 மூட்டை வரத்தான நிலையில், ஒரு மூட்டை ரூ.1,380 முதல் ரூ.1,440 விலையில் விற்பனையானது.கடந்த வாரத்தை விட இந்த வாரம் வெல்லம், நாட்டு சர்க்கரை வரத்து அதிகரித்திருந்தது.அதே நேரம் மூட்டைக்கு சராசரியாக ரூ.30 வரை விலை உயர்ந்து காணப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை