‘வெல்கம் டூ நம்ம ஊரு சென்னை!’ 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான கலக்கலான தீம் பாடல் வெளியீடு!

சென்னை : ஜூலை 28ம் தேதி தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் உலகம் முழுவதும் இருந்து 188 நாடுகளைச் சேர்ந்த 2000த்திற்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.உலகளவில் மிக கெளரவமான தொழிலாக கருதப்படும் ஒலிம்பியாட் டெஸ்ட் தொடர், தமிழ்நாட்டில் நடைபெறுவதையொட்டி பல்வேறு வகைகளில் இந்த தொடர் குறித்து அரசு சார்பில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நேப்பியர் பாலம் உட்பட முக்கிய பாலங்களில் செஸ் விளையாட்டு கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. ஏற்கனவே 39 வினாடிகள் ஓடக்கூடிய டீசர் பாடலை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்