வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அதிராம்பட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி துவக்கம்

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உப்பு உற்பத்தி பணிகள் துவங்கியது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோர பகுதியையொட்டி தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. இதேபோல் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பலத்த மழை பெய்ததால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து உப்பளங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றி உப்பு உற்பத்திக்கு ஏற்ற வகையில் உப்பளங்களை தயார்படுத்தும் பணி கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உப்பு உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. கடல் முகத்துவாரத்தை சீர் செய்தல், வரப்பு வெட்டுதல், பாத்தி கட்டுதல், கடல் நீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தற்போது உப்பள பகுதிகளில் நடைபெற்று வருவதை காண முடிகிறது.இதுபற்றி உப்பு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: உப்பு உற்பத்தி தொழில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக பாதிப்படைந்துள்ளது. உப்புக்கு போதிய விலை கிடைப்பதில்லை. முன்பெல்லாம் தொழிலாளர்கள் பற்றாக்குயைால் தூத்துக்குடி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்து உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது உள்ளூரில் உள்ள தொழிலாளர்களுக்கே வேலை இல்லாத சூழல் உள்ளது. அதிராம்பட்டனம் பகுதியில் 3ஆயிரத்துக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி நடைபெற்றது. உற்பத்தியான உப்பு ரயில் மூலம் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டது. தற்போது உற்பத்தி நிலப்பரப்பு குறைந்துவிட்டது. இந்தாண்டு 50 ஏக்கரில் மடடுமே உப்பு உற்பத்திக்கான பணிகளை தொடங்கி உள்ளோம் என்றார்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை