வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறப்பு

சேத்தியாத்தோப்பு, ஜூன் 22: காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் எரி முழு கொள்ளளவை எட்டியது. கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாராமாக உள்ள வீராணம் ஏரி கடந்த சில நாட்களாக அதன் முழுகொள்ளளவை எட்டும் நிலையில் தண்ணீர் நிரம்பி வந்தது. இந்நிலையில் தற்போது வீராணம் ஏரி அதன் முழுகொள்ளளவான 47.50 அடியை எட்டி நீர் வரத்து தொடர்ந்து வருகிறது. இதனால் சென்னை குடிநீருக்கு நான்கு மாதங்களுக்கு தண்ணீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து நீர் வரத்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி பூதங்குடி வி.என்.எஸ்.எஸ் மதகு வழியாக சேத்தியத்தோப்பு அணைக்கட்டுக்கு வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து உள்ள அதிகாரிகளுக்கு விவசாயிகளின் நலன் கருதியும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை