வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி துவக்கம்

சேத்தியாத்தோப்பு:  கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் இப்பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. ஏரியின் பராமரிப்பு காரணங்களுக்காக கடந்த ஐந்தரை மாதங்களுக்கு முன் நீர்வரத்து இல்லாமல் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கீழணை மூலம் வடவாறு வழியாக ஏரிக்கு 1150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், வீராணம் ஏரிக்கு அந்த தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் 41.05 அடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கடந்த ஐந்தரை மாதங்களுக்கு பிறகு வினாடிக்கு 10 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை