வீட்டில் பதுங்கியிருந்த விஷப்பாம்பு பிடிபட்டது

வேலாயுதம்பாளையம், செப்.27: கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே முல்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் மதி. அவர் வீட்டில் இருந்தபோது அங்கு பாம்பு ஒன்று இருந்துள்ளது. அதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மதி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து பாம்பை வெளியே துரத்தினார். ஆனால் பாம்பு வீட்டில் இருந்து வெளியேறவில்லை. இது குறித்து மதி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வீட்டுக்குள் இருந்த ஐந்தடி நீள நாகப் பாம்பை பாம்பை பாம்பு பிடிக்கும் குச்சியால் பிடித்து சாக்கு பைக்குள் போட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது