விஸ்வநத்தம் ஊராட்சியில் ரூ.18.25 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சிவகாசி, ஜூலை 8: சிவகாசி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சியில் முனீஸ்வரன் காலனியில் 15வது நிதி குழு மானியத்தில் ரூ.18.25 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டது. இந்த புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் நாகராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, தேவஆசீர்வாதம் முன்னிலை வகித்தனர்.

திமுக ஒன்றிய செயலாளரும் சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான விவேகன்ராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கியரீட்டா, ஊராட்சி துணைத் தலைவர் நாகேந்திரன், அதிமுக ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், வார்டு உறுப்பினர்கள் வசந்தலட்சுமி மாரீஸ்வரன், அருணாதேவி சக்திகணேஷ், ஊராட்சி செயலாளர் செல்வம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை