விவசாயி வீட்டில் பதுக்கிய ரூ.1 கோடி பணம் கொள்ளை

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தலைவாசல் சார்வாய்புதூர் சாமியார்கிணறு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (45), விவசாயி. இவர் தனது மனைவி மற்றும் தாயாருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு தோட்டத்தில் இருந்து வந்தபோது, அவரது வீட்டின் பின்புறத்தில் இருந்து முகமூடி அணிந்த 3 பேர் சென்றதாக கூறப்படுகிறது. உடனே வீட்டிற்குள் சென்று பார்த்த லோகநாதன், பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனதாக தலைவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது, தனது வீட்டில் இருந்த ரூ.48 ஆயிரம் பணம் மற்றும் கால் பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என முதலில் கூறியுள்ளார். பின்னர் நண்பரும் ரியல் எஸ்டேட் அதிபருமான கணேசன் ரூ.2 கோடி பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறிச் சென்றனர். அதில், ரூ.1 கோடி இருந்த ஒரு பேக்கை முகமூடி கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டனர் எனக்கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து வீட்டில் தீவிரமாக தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து கணேசனையும் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்….

Related posts

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு

சென்னைக்கு சப்ளை செய்ய வனப்பகுதியில் வெட்டி கடத்திய ரூ.1.60 கோடி செம்மரம் பறிமுதல்: 4 பேர் கைது