விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், செப்.10: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மாவட்ட செயலாளர் சௌந்திரபாண்டியன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மானாவாரி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இன்சூரன்ஸ் நிவாரண தொகையை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். உழவு, விதை, உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட இடுபொருட்களை இலவசமாக அரசே வழங்க வேண்டும்.

மானாவாரி விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மானாவாரி விளைபொருட்களை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் லிங்கம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, பொன்னுபாண்டியன், மாநில குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், பாலமுருகன் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்