விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிதாக 5 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: பெரம்பலூர் கலெக்டர் தகவல்

பெரம்பலூர், ஜூன் 29: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை யை ஏற்று பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தெரிவித்திருப்ப தாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்யும் வகையில், வேப்பந்தட்டை வட்டத்தில் அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி ஆகிய 2 இடங்களிலும், குன்னம் வட்டத்தில் அகரம் சீகூர்,

கோவில்பாளையம் மற்றும் காடூர் ஆகிய மூன்று இடங் களிலும் என மொத்தம் ஐந்து இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் கடந்த 27ம்தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. பெரம் பலூர் மாவட்ட விவசாயி கள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லினை இந்த நெல் கொள்முதல் நிலை யங்கள் மூலம் விற்பனை செய்து பயனடையுமாறு கலெக்டர் கற்பகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு