விவசாயத்திற்காக மண் எடுக்கும் விவகாரம்: இரு தரப்பினருக்கு இடையே தகராறு

 

அந்தியூர், ஆக.24: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஏரியில் விவசாயத்திற்காக மண் எடுக்க எண்ணமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர்களுக்கு அரசு உத்தரவுப்படி அந்தியூர் தாசில்தார் கவியரசு அனுமதி வழங்கி இருந்தார். இதில் எண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டரில் மண்ணை எடுத்து வந்த போது அருகாமையில் இருந்த கெட்டிச்சமுத்திரம் கிராமத்தைச் சார்ந்தவர்கள் தாங்களும் மண் அள்ளுவோம் என எண்ணமங்கலம் ஏரிக்கு சென்றுள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கெட்டிச்சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி பகுதிக்கு அருகில் கெட்டிச்சமுத்திரம் ஊராட்சியை சேர்ந்தவர்கள் டிராக்டர்களுடன் சாலை மறியல் செய்ய முற்பட்டனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அந்தியூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கெட்டிச்சமுத்திரம் பர்கூர் ரோட்டில் டிராக்டர்களுடன் விவசாயிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி