விழுப்புரம்- திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வரும் 13ம் தேதி வரை

வேலூர், ஆக.10: குண்டக்கல் ரயில்வே டிவிஷனில் ரயில் பாடைத பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம்- திருப்பதி ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் குண்டக்கல் டிவிஷனில் ரயில் பாதை பராமரிப்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் விழுப்புரம்- திருப்பதி இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் 16854 விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.30 மணியளவில் புறப்பட்டு திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் ரயில், காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் வண்டி எண் 16853 திருப்பதியில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு பாகாலா, சித்தூர், காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட் வழியாக விழுப்புரம் செல்லும் ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மாலை 4.40 மணிக்கு திருப்பதி புறப்பட்டு செல்லும். இந்த மாற்றம் நேற்று தொடங்கி வரும் 13ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை