விளையாட்டுத்துறையில் சிறப்பாக பங்களித்தோர் தேர்வு

சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு  பரிசு மற்றும் விருது வழங்குவதற்கு ரூ.16.30 லட்சம் ஒதுக்கீடு செய்து  அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அபூர்வா பிறப்பித்துள்ள உத்தரவு: சிறந்த  விளையாட்டு வீரர்கள்; உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள்;  சிறந்த விளையாட்டு நிர்வாகிகள், நடுவர்களுக்கான முதலமைச்சர் விருது  வழங்கப்படுவதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2018-19 மற்றும் 2019-20ம் ஆண்டுகளுக்கான  பின்வரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், சிறந்த பயிற்சியாளர்கள், சிறந்த  உடல்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், நடுவர்கள், விளையாட்டு  அமைப்பாளர்கள் ஆகியோருக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்  அவர் 2018-19ம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் (ஆண்) – பிருத்வி  சேகர் (புல்வெளி டென்னிஸ்), ஜீவன் நெடுஞ்செழியன் (டென்னிஸ்); சிறந்த  விளையாட்டு வீரர் (பெண்) – ஸ்ரீ நிவேதா (துப்பாக்கி சுடுதல்), சுனைனா சாரா  குருவில்லா (ஸ்குவாஸ்); சிறந்த பயிற்சியாளர்- சத்குருதாஸ் (  துப்பாக்கிச் சூடு); கோகிலா (தடகளம்); சிறந்த ஆசிரியர் – ராஜேஸ் கண்ணா  (கால்பந்து); முரளி (கடற்கரை கைப்பந்து) ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு  மற்றும் சிறந்த நடுவர்- தனபால் (கூடைப்பந்து); சிறந்த  அமைப்பாளர்-தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் ஆகியோருக்கு தலா ரூ.10,000  மதிப்புள்ள தங்கப்பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுகிறது. இதேபோல் 2019-20ம்  ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் (ஆண்) – பிரஜ்னேஷ் குணேஸ்வரன்  (புல்வெளி டென்னிஸ்), மோகன் குமார் (தடகளம்); சிறந்த விளையாட்டு வீரர்  (பெண்) – அனுஷியா பிரியதர்ஷினி (தேக்வாண்ேடா), செலினா தீப்தி டேபிள்  (டேபிள் டென்னிஸ்); சிறந்த ஆசிரியர் – முகமது நிஜாமுதீன் (தடகளம்), கோகிலா  (கால்பந்து); சிறந்த ஆசிரியர் ராமசுப்பிரமணியன் (பூப்பந்து), ஆரோக்கியா  மெர்சி (வாலிபால்) ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. சிறந்த  நடுவர் சுந்தர்ராஜ்க்கு (கபடி) ரூ.10,000 மதிப்புள்ள தங்கப்பதக்கம்  வழங்கப்படுகிறது. எனவே இவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்குவதற்கு  ரூ.16.30 லட்சம் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை