விலை உயர்வை கட்டுப்படுத்த 3 சமையல் எண்ணெய் மீதான வரி குறைப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: சமையல் எண்ணெய்களின் விலையை கட்டுப்படுத்துவதற்காக பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மீதான சுங்க வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய், தங்கத்துக்கு அடுத்தப்படியாக வெளிநாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்படும் 3வது பொருளாக சமையல் எண்ணெய் இருக்கிறது. நாட்டில் சமீப காலமாக இந்த எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக சமீபத்தில் இறக்குமதி வரியை ஒன்றிய அரசு கணிசமாக குறைத்தது. மேலும், இந்த பொருட்கள் பதுக்கப்படுவதை தடுப்பதற்காக, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோஸ்தகர்களிடம் இருந்து அடிக்கடி இருப்பு நிலவரத்தை கேட்டு பெறும்படியும் மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.இந்நிலையில், சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய்களுக்கான சுங்க வரியை ஒன்றிய நிதியமைச்சகம் நேற்று குறைத்தது. பாமாயிலுக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 2,5 சதவீதமாக குறைக்கப்பட்டது, சோயா எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய்க்கான சுங்க வரி தற்போதுள்ள 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த உத்தரவு நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் இந்த எண்ணெய்களின் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை குறையும்….

Related posts

ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

வரி பத்தியெல்லாம் என்கிட்ட கேட்காதீங்க…சொல்கிறார் நிர்மலா

பீகாரில் பலத்த மழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: ரயில்கள் ரத்து