விலங்குகள் நடமாட்டம் கோவிலாறு அணைப்பகுதிக்கு செல்ல தடை: வனத்துறையினர் கண்காணிப்பு

 

வத்திராயிருப்பு, மே 28: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, புலி, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது இந்த பகுதி மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கோவிலாறு அணை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வசமுள்ளநிலையில், புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அணைகளுக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க வனத்துறையினரும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலாறு அணைக்கு செல்லும் வழியில் பராமரிப்பின்றி கிடந்த செக் போஸ்ட்டை சீரமைத்து தற்போது அங்கு 24 மணி நேரமும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடிக்க செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கோவிலாறு அணை பகுதியில் விலங்குகள் நடமாட்டம் இருக்கும் நிலையில் பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை