விறுவிறுப்பாக நடக்கும் உள்ளாட்சி தேர்தல் பணிகள்

வாலாஜாபாத்: தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலர்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். இதையொட்டி, வாலாஜாபாத் பேரூராட்சியில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேமா தலைமையில் பஸ் நிலையத்தில் உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டன. தொடர்ந்து, 4 பதட்டமான வாக்குச்சாவகளில் கூடுதல் சிசிடிவி  கேமராக்கள் பொருத்துவது,  வாக்குச்சாவடி மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்து முழுமையாக தூய்மைப்படுத்துதல், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பாதுகாப்பாக அழைத்து  சென்று வாக்களிக்க 3 சக்கர சைக்கிளை, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நிறுத்தி வைப்பது உள்பட பல்வேறு பணிகளை, முழு வீச்சில் செய்து வருகின்றனர்….

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு; ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை