விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டின் முதல் நாளே விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வடுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் ஆர்.கே.வி.எம். பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தியை கேட்டு மன வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆலையை திறப்பதற்கு முன்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆலை நிர்வாகம் சரியாக மேற்கொண்டுள்ளதா என்பதை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் கண்காணிப்பது அவசியம். மேலும் தகுதி வாய்ந்த வேதியியலர் பணி அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவைகள் பின்பற்றப்பட்டதா என்பது தெரியவில்லை. மேலும் விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. இவைகளை எல்லாம் ஆய்வு செய்து சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டவர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை நிர்வாகத்திடமிருந்து இழப்பீடு பெற்று தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்….

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்