விருதுநகரில் பெய்த திடீர் மழை: மகிழ்ச்சியில் மக்கள்

விருதுநகர், ஏப். 5: தென்மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் 100 டிகிரியை தாண்டி தகித்து வருகிறது. கந்தகபூமியான விருதுநகர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. அதிகாலையிலேயே புழுக்கத்துடன் கூடிய ஊமை வெயிலில் துவங்கி, உச்சி வேளை வெயில் மண்டையை பிளக்கும் அளவிற்கு உள்ளது. இதனால் மதிய வேலைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைய துவங்கி உள்ளது. பங்குனி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், சித்திரை வெயில் என்ன செய்ய போகிறதோ என மக்கள் புலம்ப துவங்கி விட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காற்றுடன் 15 நிமிடம் பெய்த சாரள் மழையால் பூமி குளிர்ந்தது. திடீர் மழைக்கு பின்னரும் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் குளிர்ச்சி நிலவி நேற்றைய பொழுது நிம்மதியானது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை