விபத்தில் இறந்த கணவருக்கு கோயில் கட்டிய மனைவி: ஆந்திராவில் நெகிழ்ச்சி

திருமலை: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர் அங்கிரெட்டி. இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அங்கிரெட்டி சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார். விபத்தில் சிக்கிய கணவர் திடீரென உயிரிழந்ததால் அவரது மனைவி பத்மாவதி மிகுந்த சோகமடைந்தார். கணவரின் பிரிவை தாங்க முடியாமல் பத்மாவதி தினமும் தவித்தார். இந்நிலையில் பத்மாவதியின் கனவில் அங்கிரெட்டி வந்து, தனக்கு கோயில் கட்டும்படி கேட்டுக்கொண்டாராம். இதனை தொடர்ந்து, கணவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பத்மாவதி தனது கணவருக்கு கோயில் கட்ட முடிவு செய்தார். இதற்காக தனது மகன் சிவசங்கர், அங்கிரெட்டியின் நண்பர் ஆகியோரின் உதவியுடன் கோயில் கட்டினார். மேலும், தனது கணவரின் மனம் பளிங்கு கற்களை போன்றது என்பதால் அவரது சிலையை பளிங்கு கற்களால் செய்து கோயிலில் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி தனது கணவருக்காக கட்டிய கோயிலில் அவரது நினைவு நாள், பிறந்த நாள் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கி வருகிறாராம். உயிரிழந்த கணவனுக்கு மனைவி கோயில் கட்டி வழிபடும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 4 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்

ஹிஸ்புல்லா தலைவர் கொலையை கண்டித்து ஸ்ரீநகரில் ஷியா பிரிவினர் போராட்டம்: மாஜி முதல்வர் பிரசாரம் ஒத்திவைப்பு