விநாயகர் சதுர்த்தி விழிப்புணர்வு

செங்கல்பட்டு, செப்.6: இந்தியா முழுவதும் வரும் 7ம்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, இயற்கைக்கு மாறாக விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு கழிவு மேலாண்மை கூட்டமைப்பு இணைந்து, விநாயகர் சதுர்த்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடந்தது. இதில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும்போது, இயற்கைக்கு மாறான பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கக்கூடாது. மேலும், விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதினால், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து விளைவிக்காத வண்ணம் விநாயகர் சிலைகளை தயாரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து பள்ளி மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்