விதிமுறைகளை பின்பற்றாத பெட்ரோல் பங்கிற்கு சீல்: தாசில்தார் அதிரடி நடவடிக்கை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் பெட்ரோல் பங்கிற்கு தாசில்தார் சீல் வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் கொளப்பாக்கம் கிராமத்தின் சாலையோரத்தில் பாரத் பெட்ரோல் பங்க் பல ஆண்டுகளாக இயங்குகிறது. கடந்த 17.10.2020 அன்று, இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போது தீ விபத்து ஏற்பட்டதாக நாக்பூரில் உள்ள வெடிமருந்து தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இதுதொடர்பான இறுதி விசாரணை முடிந்தது. இதற்கான, மறு உத்தரவு வரும் வரை அந்த பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கும்படி நாக்பூரில் உள்ள தலைமை கட்டுப்பாட்டாளர் செங்கல்பட்டு கலெக்டருக்கு கடிதம் அனுப்பினார்.அதன்பேரில், கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் கொளப்பாக்கம் பெட்ரோல் பங்க்கை ஆய்வு செய்தனர். அப்போது, பெட்ரோலியம் நிறுவன சட்டம் மற்றும் விதிகளை உரிய முறையில் பின்பற்றாமல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கும்படி கலெக்டர் மற்றும் டிஆர்ஓ வண்டலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், தொடர்ந்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் நேற்று மதியம் பாரத் பெட்ரோல் பங்கிற்கு சென்று அதிரடியாக சீல் வைத்தார். மேலும், மின் இணைப்பையும் துண்டித்தனர். இதனால், அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

கனியாமூர் பள்ளி வன்முறை: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்; அகில இந்திய பிரச்னையாக நீட் தேர்வு விவகாரம் மாறியுள்ளது.! நிச்சயம் நல்ல முடிவு வரும் என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டி

கீழடி அகழாய்வில் பெரிய அளவில் செப்பு பொருட்கள் கண்டெடுப்பு