விதிமீறும் சாய ஆலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம்: காவிரி ஆற்றை மாசுபடுத்தும் சாய ஆலைகளை கண்டித்து, விசிலடித்து கைதட்டும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பள்ளிபாளையத்தில் உள்ள ஆவத்திபாளையம், அக்ரஹாரம், ஒட்டமெத்தை, சமயசங்கிலி உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு சாயச்சாலைகள் இயங்கி வருகின்றன. துணிகளை வெள்ளைப்படுத்த சலவைச்சாலைகளுக்கு பெற்ற அனுமதியை பயன்படுத்தி, சாயமிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் கழிவுநீரை சுத்தப்படுத்தி, மறு உபயோகத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட போதிலும், பெரும்பாலான சாயம் மற்றும் சலவைச்சாலைகளில், பெரிய குழாய்கள் மூலம் ஆவத்திபாளையம் ஓடையில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த ரசாயன கழிவுநீர் அனைத்தும், காவிரி ஆற்றில் கலந்து குடிநீரை பாழ்படுத்தியுள்ளது. இதனால், காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரில் நாற்றம் வீசுகிறது.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்