விண்வெளியில் ஷூட்டிங்கை முடித்து பூமிக்கு திரும்பிய ரஷ்ய நடிகை

மாஸ்கோ: ‘தி சேலஞ்ச்’ என்ற திரைப்படத்தின் ஷூட்டிங்கை விண்வௌியில் முடித்துக்கொண்டு நடிகை மற்றும் குழுவினர் பூமிக்கு திரும்பினர். ரஷ்யாவை சேர்ந்த இயக்குனர் கிளிம் ஷிபென்கோ உருவாக்கும் படம், ‘தி சேலஞ்ச்’. விண்வெளியில் ஏற்படும் மருத்துவ நெருக்கடி தொடர்பான கதை ெகாண்ட இப்படத்துக்காக கிளிம் ஷிபென்கோ, நடிகை யூலியா பெரெசில்ட், விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் ஆகியோர், கஜகஸ்தானில் இருக்கும் பைகானூர் ஏவுதளத்தில் இருந்து, கடந்த 5ம் தேதி சோயூஸ் எம்எஸ்-19 ராக்கெட் மூலம் விண்வெளி சென்றனர்.தொடர்ந்து 12 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் ஷூட்டிங் நடத்திவிட்டு, நேற்று ராக்கெட் மூலம் பூமிக்கு பத்திரமாக திரும்பினர். அவர்களுடன் ஓலெக் நோவிட்ஸ்கி என்ற விண்வெளி வீரர், தனது 190 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பினார்….

Related posts

வேலைக்காக இங்கிலாந்து சென்றவர் எம்பியாக தேர்வு: கன்சர்வேட்டிவ் எதிர்ப்பு அலையில் வென்ற கேரள செவிலியர்

இலங்கை அதிபர் தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டி

இலங்கையில் அரசு ஊழியருக்கு இந்தாண்டு சம்பள உயர்வு இல்லை: அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்