விடுதி மாணவர்களுக்கு சிறப்பு உணவு கட்டண தொகை உயர்வு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவு: 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை யின்போது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பொங்கல், குடியரசு தினம், தமிழ்வருட பிறப்பு, சுதந்திர தினம், தீபாவளி ஆகிய 5 விழா நாட்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் சிறப்பு உணவு கட்டணம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.20ல் இருந்து ரூ.40 ஆகவும், கல்லூரி விடுதி மாணவ, மாணவிகளுக்கு ரூ.40ல் இருந்து ரூ.80ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி கல்லூரி விடுதி மாணவர்களுக்கு சிறப்பு உணவு கட்டணம் ரூ.80ஆகவும், பள்ளி விடுதி மாணவ, மாணவிகள் ஒருவருக்கு சிறப்பு உணவு கட்டணம் ரூ.40 ஆகவும் உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்படுகிறது. இதற்கான கூடுதல் செலவினம் ரூ.1 கோடியே 14 லட்சத்து 51 ஆயிரத்து 200 கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது. இதன்மூலம் 1,25,295 மாணவ,மாணவிகள் பயன்பெறுவார்கள்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு