விசிகவினர் ஆர்ப்பாட்டம்

 

தேனி, ஆக. 27: தேனி நகர் பழைய பஸ்நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் சேகுவாரா தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.ரபீக், மேற்கு மாவட்ட செயலாளர் மதன் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர்கள் தமிழ்வாணன், மண்டல துணை செயலாளர் சுருளி ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது என பேசிவரும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், கோவில்பட்டி அருகே கழுகுமலையில் மாணவர் ஹரிபிரசாத் மீது நடந்த கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்ட துணை செயலாளர் செல்வராசு, மாவட்ட பொருளாளர் பெர்க்மான்ஸ், செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் ஆண்டி, தேனி ஒன்றிய செயலாளர் ராஜதுரை பெரியகுளம் தொகுதி துணை செயலாளர் ஆண்டவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தேனி நகர செயலாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி